( வி.ரி.சகாதேவராஜா)
ஏலவே சுனாமியால் பாதிக்கப்பட்டு அண்மையில் மீள்புனருத்தாரணம் செய்யப்பட்டு விரைவில் மகா கும்பாபிசேகம் காணவிருக்கும் அருகிலுள்ள பாண்டிருப்பு விஸ்ணு ஆலயத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆலயமுன்னாலுள்ள கொங்கிறீட்வீதி கடலினுள் அள்ளுண்டுள்ளது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்குச்சென்று ஆலய நிருவாகிகளுடன் கலந்துரையாடிதோடு கடலோரப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.அருணனிடன் இதுவிடயத்தை எத்திவைத்தார்.
குறித்த கடலோரப்பகுதியில் கல்அணை இடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உத்தியோகத்தர் அருணன் ,உறுப்பினர் ராஜனிடம் உறுதியளித்தார்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours