சபுகஸ்கந்த – மாபிம பகுதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு – டாம் வீதியில் இதற்கு முன்னர் பயணப் பையிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours