(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

"சுபீட்ச பாதைப் புரட்டு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக  பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் நாடுபூராகவும்  இடம்பெற்றது.
 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்
"நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை பிரகனடத்திற்கு அமைவாக”
100,000 கிலோமீற்றர் வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்
வேலைகளை பூர்த்தி செய்த 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து மக்கள் உரிமையாக்குதல் செயற்பாடானது இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டம் பள்ளச்சேனை பகுதியில் வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசில் அமைக்கப்பட்ட இரண்டு கிலோமீட்டர் நீளமான கொங்கிறிட் வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

49 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த வீதியானது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய குழுக்களான நரிப்புல்தோட்டம் மற்றும் ஆயித்தியமலை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours