(சுமன்)
வலி. வடக்குப் பிரதேச மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் அப்பிரதேசத்தில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய நிலப்பரப்புக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இக் கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் மீள் குடியேற்ற அமைப்பின் தலைவர் குணபாலசிங்கம் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் மயிலிட்டியை சேர்ந்த மக்கள் சர்வதேச அழுத்தம் மற்றும் கூட்டமைப்பின் முயற்சியால் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டமை. ஆனாலும் அதன் முழுமையான பயனை எமது மக்கள் அனுபவிக்க முடியாமை தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன், துறைமுகத்தை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்விடம் உள்ளிட்ட 216 ஏக்கர் நிலமும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதனால் மீனவர் சமூகம் மிகவும் பாதிப்பை எதிர்தோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours