நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச செயலக நிர்வாக பிரதேசங்களிலிருந்து செளபாக்கியா வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளர்களுக்கான உளவியல் உளவளத்துணை பயிற்சி வழங்கும் நிகழ்வுகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சமுர்த்தி வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலக கேட்பேர் கூடத்தில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளரும் மனப்பாங்கு மாற்றத்தினூடாக ஆளுமையை விருத்தி செய்தல் மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பான வளவாளராக சமூக சேவைகள் உத்தியோகத்தர் சீ.குணரட்ணமும், நிதி முகாமைத்துவம் மற்றும் வியாபார திறன்கள் தொடர்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எப். பர்ஸானாவும், போதைப்பொருள் பாவணை மற்றும் பிரச்சினைக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை வடக்கு கிழக்கு இணைப்பாளர் பஸீர் முஹம்மட் றஸாடும், தொழிற்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக திறன் விருத்தி உத்தியோகத்தர் இஸ்ஸடீனும் விரிவுரை நிகழ்த்தினர். மேலும் இந்நிகழ்வில் சமூக சேவைப்பிரிவு, சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours