வாகன இறக்குமதிக்கான சந்தை விரைவில் திறக்கப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை. இதனால், சிலர் என்னுடன் உடன்படாமல் இருக்கலாம்.
வாகனங்களை இறக்குமதி செய்ய இன்னும் 6 முதல் 7 மாதங்களாகும். அதுவரை அதற்கான சந்தைகள் திறக்கப்படாது என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours