(சுமன்)
கொவிட் 19 தடுப்பூசியேற்றல் திட்டத்தின் ஒருவருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக நாடு தழுவிய ரீதியில் தேசிய வேலைத்திட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு பணியாற்றிய சுகாதாரப் பிரிவினர், பொலிஸ், இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டடோரைப் பாராட்டும் முகமாகவும், தடுப்பூசியேற்றலை மேலும் ஊக்குவிக்கும் முகமாகவும் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆன்மீகத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, அரசாங்கக அதிபர் கே.கருணாகரன், முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயுரன், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய நாளில் ஒருவருடத்தை சிறப்;பிக்கும் முகமாக இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது கொவிட் 19 பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினர் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் வெற்றிகரமான முன்னெடுப்புகள், தற்போது தடுப்பூசி ஏற்றலில் காணப்படுகின்ற சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் இடம்பெற்றதுடன், கொவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாகச் செயற்பட்ட அனைத்து தரப்பு செயற்பாட்டாளர்களும் இதன்போது வாழ்த்தி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours