வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது
மடத்தடியில் சங்காபிஷேகம்!
திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்!
ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வெற்றி வியூகம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு
( அஸ்ஹர் இப்றாஹிம்)
மள்வானை அல்-முபாரக் தேசியக் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியையும், கடந்த 31 வருடங்களாக தனது தாய்ப் பாடசாலைக்காக முன்னுதாரணமிக்க ஒரு ஆசிரியையாக திகழ்ந்த, ஓய்வு பெறும் நாள் வரையில் கற்பித்தலினூடு மாணவர் உள்ளங்களில் தடம்பதித்த ஒரு ஆசிரியையுமான திருமதி ஏ.ஆர்.ஸெயினுல் ஹுஸைனா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள், பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுகளின் போது, பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதோடு, பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள் மூலம் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours