(அஸ்லம் எஸ்.மெளலானா)

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.வீதியில் இருந்து தோணாவை ஊடறுத்துச் செல்லும் பாலம் கிழக்கு மாகாண சபையின் எல்.டி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் மீள் கட்டுமாணம் செய்யப்படவுள்ளது.

இக்கட்டுமாணப் பணிகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம் செய்து வைக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பான விசேட கலந்துரையாடல், சனிக்கிழமை (29) இரவு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.றபீக், அப்துல் அஸீஸ், ஏ.ஆர்.அஸீம், எம்.எம்.ஜௌபர், என்.எம்.றிஸ்மீர், நஸ்ரின் முர்ஷித், ஆயிஷா சித்தீக்கா, சுஹைல் அஸீஸ், எஸ்.மெளபியா, எல்.டி.எஸ்.பி. திட்ட பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, உள்ளுராட்சி உத்தியோகத்தர் எம்.நெளஷாத், முன்னாள் உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் மற்றும் பால நிர்மாண வேலைத் திட்ட ஒப்பந்தக்காரர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours