(காரைதீவு நிருபர் )
பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கனின் தலைமையில் மேற்படிவிழா பாடசாலை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பாகநடைபெற்றது.
பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் வழிகாட்டலில், உதவிஅதிபர் ந.கோடீஸ்வரன் நெறிப்படுத்தலில் பொங்கல்விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். அவர் பொங்கலின் வரலாறு மகிமை பற்றி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, பொங்கல் இடம்பெற்று சமயஆராதனை இடம்பெற்றது.அத்துடன் கலாசரபாரம்பரியத்திற்கமைவாக ஏனைய பட்சணங்களும் தயார்படுத்தப்பட்டிருந்தன.
விழாவில் பங்கேற்ற இஸ்லாமிய கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் மூவினமாணவர்களும் பாரம்பரிய பொங்கலை உணவை விரும்பி பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கஅம்சமாகவிருந் தது.
Post A Comment:
0 comments so far,add yours