( அஸ்ஹர் இப்றாஹிம்)


சியபத பினான்ஸ் பீ.எல்.சி   நிறுவனத்தால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு சுமார் 0.3 மில்லியன் பெறுமதியான HDU படுக்கைகளை  கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சியபத பினான்ஸ் பீ. எல்.சி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் அவரது குழுவினரால் நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ்  இவை வழங்கி வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில். சியபத பினான்ஸ் பீ.எல்.சி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம்.பிரிம்சாத் உள்ளிட்ட குழுவினர் , வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொவிற் -19 தொற்று உக்கிரமடைந்து இருந்த காலகட்டத்த்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த டாக்டர் ஜீ.சுகுணன் இதற்கான முன்மொழிவை செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த அன்பளிப்பினை வழங்குவதற்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதலை மேற்கொண்டிருந்த   சியபத பினான்ஸ் பீ.எல்..சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன அவர்களுக்கு பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours