(மண்டூர் மேலதிக நிருபர்)
பிரமாண்டமாக நடைபெற்ற மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழாவும் கும்பாபிஷேகமும் சுவாமி விவேகானந்தரின் 125வது ஓராண்டு தொடர் விழாவும் 22,ம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் (தலைவர் ராமகிருஷ்ண மிஷன்) ஶ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி (ராமகிருஷ்ண மிஷன தலைவர் கொழும்பு) ஶ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜி மகராஜ் (பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் (உதவி முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஆகியோரின் தலைமையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அத்தோடு சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை விஜயம் சுவாமி விவேகானந்தரின் ரத ஊர்வலம் மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண மன்றத்தில் இருந்து மாலை 3.00 மணிக்கு ஆரம்பித்து சுவாமி தீர்த்தமாடச் செல்லும் வீதியூடாக மண்டூர் மாரியம;மன் ஆலயத்தை வந்தடைந்து பின்னர் 5.00 மணியளவில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்;தை வந்தடைந்தது.
Post A Comment:
0 comments so far,add yours