(வி.ரி.சகாதேவராஜா)
கடந்த ஜனவரி 24 ஆம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்தின் நான்காம் பகுதி மலையக வரலாற்றிலே மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றது என கருதுகின்றேன். அதாவது மேற்படி அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, பெருந்தோட்டத்துறையிலே காணப்படும் ஏறக்குறைய 450 தோட்ட மருந்தகங்களை அரச சுகாதார முறைமையுடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். மேலும் இதன் முதற்கட்டமாக 59 மருந்தகங்களை அல்லது சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ்வடிப்படையில் பெருந்தோட்டத்துறை சுகாதார முறைமை அரச சுகாதார முறைமையின்கீழ் கொண்டுவரப்படவுள்ளமை பாராட்டத்தக்கது. இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகின்றோம்.
என்று மனிதஅபிவிருத்திதாபன பணிப்பாளர்நாயகம் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இவ்வரலாற்றுரீதியான மாற்றத்தiயிட்டு அவர் மேலும் கூறுகையில்:
மேற்படி பெருந்தோட்ட சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். மனித அபிவிருத்தி தாபனம் கடந்த பல வருடங்களாக செயற்பட்டுவந்துள்ளமையும் அறிந்த விடயமே. ஏன்னேன்றால் சரியானதை சரியான முறையில் செய்வதற்கு உதவுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டியுள்ளது. அந்தவகையில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் என்போர்களுக்கும், குறிப்பாக இம்முக்கியமான விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு சென்ற கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், இவ்விடயத்தில் பின்புலமாக செயற்பட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் நன்றி சொல்லவேண்டியுள்ளது. அதேவேளை நாம் மறந்துவிட முடியாத விடயம் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் பெருந்தோட்டத்துறை சுகாதாரத்தை நவீனமயப்படுத்துவது மற்றும் அரச சுகாதார சேவையுடன் ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டே வந்தனர். மேலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்விடயத்தை 2019 ஆம் ஆண்டு; சுகாதார துறைசார்ந்த பாராளுமன்ற குழு ((Sectoral Overseas Committee on Health)விடயத்தை கலந்தாலோசனை செய்தது. அப்போதைய மலையக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுவந்தமைக்கும் நன்றி கூறவேண்டியுள்ளது. மேற்படி மாற்றத்திற்கு மலையக அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் செயற்பட்டுள்ளமை வெளிப்படையாக இருந்தபோதும், பெருந்தோட்டத்துறை சுகாதாரம் அரச சுகாதாரத்துறையுடன் இணைப்பதற்காக மனித அபிவிருத்தி தாபனம் பல்வேறு நடவடிக்கைகளையும் செய்துவந்தமை குறிப்பிடதக்கது.
மேற்படி மாற்றத்திற்கு மலையக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் செயற்பட்டுள்ளமையை நாம் மறுக்கமுடியாது. அதேவேளை மனித அபிவிருத்தி தாபனம் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பெருந்தோட்ட சுகாதாரத்துறையை அரசாங்க சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைப்பது சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுவந்த நிறுவனமாகும். மனித அபிவிருத்தி தாபனம் இதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாததாகும்.
நிறுவனம் பெருந்தோட்ட சுகாதார நிலை தொடர்பாக ஆய்வு, கொள்கைத்திட்டம் மற்றும் செயற்பாட்டு திட்டம் என்பவற்றை மேற்கொண்டு கொள்கை வகுப்போர் மற்றும் திட்டமிடுவோர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மலையக பெருந்தோட்ட சுகாதாரம் தேசியமயமாக்கல் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் அதிகாரிகள், புத்தி ஜீவிகள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் போன்றோருடன் மனித அபிவிருத்தி தாபனம் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
மலையக பெருந்தோட்ட சுகாதாரம் தேசியமயமாக்கல் தொடர்பாக வைத்திய துறைசார்ந்த உயர் அதிகாரிகள், ஏனைய துறைசார்ந்த நிபுணர்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுகாதாரதுறைசார்ந்த பாராளுமன்றகுழு கூட்டத்தில் ((Sectoral Overseas Committee on Health) கலந்துகொண்டபோது, பெருந்தோட்ட சுகாதாரம் அரச சுகாதாரதுறையுடன் ஒருங்கிணைத்தல் தொடர்பான உபாயத்திட்டம் ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய மனித அபிவிருத்தி தாபனம் மேற்படி கூட்டத்தில் கலந்துக்கொண்டு திட்டவரைபை சமர்ப்;பித்தது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய ளுழுஊ ர்நயடவா குழு தலைவராக இருந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு. திலகராஜ் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சு, நிலம் சம்பந்தமான அமைச்சு, நிதி அமைச்சு, நிலம் கையகப்படுத்தல் திணைக்களம், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இவ் வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற மலையக சுகாதாரத்தை தேசியமயமாக்கல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்களின்போது, தோட்ட சுகாதார நிலைமைகள், அரசாங்கம் உருவாக்கிவரும் கொள்கைகள், தோட்ட சுகாதாரத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள பிரச்சினைகள், தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெருந்தோட்டத்துறையின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பெருந்தோட்டத்துறை சுகாதாரத்தை தேசிய மயப்படுத்துதல் தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நடைமுறை அறிவு, பல்வேறு கலந்துரையாடல்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ளுழுஊ ர்நயடவா குழுவினால் முதற்கட்டமாக மலையகத்தை சார்ந்த 50 - 60 வைத்திசாலைகள் உள்வாங்கப்படுவதற்கான ஆலோசனையின்படி, பிராந்திய சுகாதார காரியாலயம் (RDHS) மாவட்ட சுகாதார பணிமனை (ஆழுர்) மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் (ர்னுழு) என்பன இணைந்து 50 - 60 வைத்தியசாலைகளை தெரிவு செய்து பெயர் பட்டியலை முன்மொழிந்தது. தொடர்ந்து கலந்துரையாடல்களுக்கு பின் சுகாதார அமைச்சு, பிராந்திய சுகாதாரப்பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரிகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபில் எவ்வாறு தோட்டமட்ட வைத்தியசாலைகள் தெரிவு இடம்பெற்றுள்ளது என தெளிவுப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக காணப்படும் இப்பிரச்சினைக்கு நல்லதொரு முடிவைநோக்கி மீண்டும் புதிய அரசாங்கத்திடம் இக்கோரிக்கையை முன்வைத்து நியாயப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வடிப்படையில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டது. எவ்வாறெனினும் தற்போதைய பிரதமர் திரு. மஹிந்த ராஜபக்ச அவர்களே பல வருடங்களுக்கு முன்பாக பெருந்தோட்டத்துறை சுகாதார அரச சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்வைத்தவராவார்.
முதலாவதாக கொள்கைதிட்டமொன்று காணப்படுவது மிக முக்கியமானதாகும். அதே நோக்கியே நாம் நமது அரசியல் வியுகங்கங்களையும், காய் நகர்த்தல்களையும் செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை திட்ட நடைமுறைப்படுத்தல் அதற்கான வரவு, செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் ஆளணியினரை தயார்ப்படுத்தல் என்பவை மிக முக்கியமான விடயமாகும். இன்றைய அரசியல,; பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செயற்படுத்தல் என்பது சற்று கேள்விக்குறித்தான விடயமாகும். என்றாலும் மலையகத்தின் கல்வித்துறையை அரச மயமாக்கியதிலிருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தில் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறியிருப்பதற்கு காரணம் எம்மிடையே கல்வியில் ஏற்பட்ட மாற்றமே. ஆகவே, கல்வியில் 1970 ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்டப்பாடசாலைகள் இருந்தன. 1972 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை அரச பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் நன்மைகளை இன்று நாம் அனுபவிக்கின்றோம். எனவே மாற்றங்கள் படிபடியாகவே இடம்பெற்றுவரும்.
பெருந்தோட்ட சுகாதார சேவையாளர்கள் கடந்த கலாணித்துவ காலத்திலிருந்து மிக முக்கியமான பங்காற்றிவருகின்றனர். இன்று இம்மக்கள் ஓரளவாவது சுகாதாரத்துறையில் மேம்பாடு அடைந்துள்ளமைக்கு இவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். எவ்வாறெனினும் ஒட்டுமொத்த மக்களின் சுகாதார உரிமை என்பது மறுக்கமுடியாத விடயமாகும். அரச சேவைகளை பெற்றுக்கொள்ளும் உரிமை மலையக பிரஜைகளுக்கும் காணப்படுகின்றது. இவ்வடிப்படையில் பெருந்தோட்ட சுகாதார சேவையாளர்களையும் அரசாங்க கொள்கைத்திட்டத்திற்கு அமைய அவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகுதிக்கேற்ப அரசத்துறையுடன் உள்ளீர்க்கப்படவேண்டும் என்ற முன்மொழிவையும் மனித அபிவிருத்தி தாபனம் (HDO) முன்வைக்கின்றோம்.
Post A Comment:
0 comments so far,add yours