(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய இயற்கை உர உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் நிகழ்நிலை ஊடாக
நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இயற்கை உரங்களை கொள்வனவு செய்தல், உற்பத்தியாளர்களை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் என்பன தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்நிலை கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை உர உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் இயற்கை உர உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனைகள், உரம் விற்பனையை விரிவுபடுத்துதல், சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், உரம் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், 231 ஆவது இராணுவப் படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் மற்றும் விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் இயற்கை உர உற்பத்தியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன் நிறைவில் 231 ஆவது இராணுவப் படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார உள்ளிட்ட உர திணைக்களத்தின் அதிகாரிகளும் கள விஜயமொன்றினை மேற்கொண்டு மாவட்டத்தில் தற்போது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இயற்கை உரத்தினை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours