(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வது வருட நிறைவையொட்டி, பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் லீச் (அட்டை) என வர்ணிக்கப்படும் மர்ஹூம் பௌஸியின் 11 வது ஆண்டு நினைவாகமிகக்கோலாகலமாக மார்ச் மாதம் நடக்கவிருக்கும்
கடினபந்து சுற்றுப்போட்டியின் கழக நிரல்படுத்தல் மற்றும்
மர்ஹூம் பௌஸியின் நினைவு தினமான (27) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கழகத்தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில்
கமு/௧மு/அல் -ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை அமைப்பாளர்,சிரேஷ்ட
சட்டத்தரணி, அப்துர் ரஸாக்,கௌரவ அதிதியாக
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி முஹம்மட் சம்சுதீன் ஆகிேேயாரும்,
கௌரவ விருந்தினர்களாக மர்ஹூம் பௌஸியின் புதல்வர் பாதில் ,
சகோதரர் நவாஸ் மற்றும் பிரதி அதிபர் சிறாஜ் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இச்சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் 32 பிரபல கடினபந்து கிரிக்கெட் அணிகளின் அணித்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.சுற்றுப்போட்டியின் தவிசாளர் றாஜுதீனின் நெறிப்படுத்தலிலும்ஆசிரியர் றியாஸின் தொகுத்து வழங்கலிலும் இந்நிரல்படுத்தல் நிகழ்வு நடைபெற்றதுடன், மர்ஹூம் பௌஸி அவர்களுக்காக
துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து
இத்தொடரில் வெற்றிபெறும் அணிகளுக்கான கிண்ணங்கள்
திரை நீக்கம் அதிதிகளால் செய்து வைக்கப்பட்டதுடன் ,
போட்டிக்காக கழகங்கள் மர்ஹூம் பௌஸியின் புதல்வரூடாக குழுவில் நான்கு கழகமாகசிறப்பான தெரிவுமூலம் நிரல்படுத்தப்பட்டது.
இறுதியாக , பிரதம அதிதி உரையின் உரை பிரதி அதிபர் சுஜான் அவர்களின்
Post A Comment:
0 comments so far,add yours