( காரைதீவு சகா)

 திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட காணிஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் பொதுமக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.


 இதன்போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமாகிய டபிள்யூ.டி.வீரசிங்க கலந்து சிறப்பித்தார்
நிகழ்வில்
 உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அனோஜா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.மோகனராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ரி.கந்தசாமி, சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆர்.சசீந்திரன், காணி உத்தியோகத்தர்களாகிய பி.கோவிந்தசாமி, திருமதி.ரி.லோஜினி, என்.நந்தகுமார், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆர்.ஜெகதீஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் கே. பரமானந்தம்,சமுக சூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் எஸ்.பி..சீலன் , ஆகியோரால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 40பேருக்கு அளிப்புக்களும் 20 பேருக்கு உத்தரவுப்பத்திரங்களுமாக 60 பயனாளிகளுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் திருக்கோவில் பிரதேச செயலகமானது கடந்த 2020ஆண்டு 800க்கு மேற்பட்ட காணி அளிப்பு பத்திரம் தயாரித்து கிழக்கு மாகாணத்திலே முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை இதில் மேலும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் மேலும் இவ் வெற்றி திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியால் கிடைக்க பெற்ற முதலிடமாகும் என்பன குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours