(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்ளப்பு மாவட்டத்தில் க.பொத. உயர்தரப்பரீட்சைக்கு இம்முறை 9451 மாணவர்கள் தோற்ற தகுதி பெற்றுள்ளதாக கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப்பரீட்சை இன்று (7) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் நாடு பூராகவும் நடைபெறும் உயர்தர பரீட்சையில் இம்மாவட்டத்தில் 05 கல்வி வளயங்களில் 08 ஒருங்கிணைப்பு நிலையங்களுடாக 71 நிலையங்களில் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
இப்பரீட்சையில் இம்மாவட்டத்திலுள்ள 9451 பரீட்சாத்திகள் பரீட்சை எழுதுவதுடன் இவர்களில் 4034 ஆண் பரீட்சாத்திகளும,; 5317 பெண் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர். இவற்றில் தமிழ் மொழி மூலம் 9406 பரீட்சாத்திகளும், ஆங்கில மொழி மூலம் 42 பரீட்சாத்திகளும், சிங்கள மொழி மூலம் 03 பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர். இதில் தனியார் பரீட்சாத்திகள் 2580 இம்முறை பரீட்சைக்குத் தோற்றுவது விசேட அம்சமாகும்.
விசேடமாக கோவிட் 19 அறிகுறிகளுடன் காணப்படும் மாணவர்களுக்கு நாடுபூராகவும் 29 தனியான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் கொவிட் 19 பாதிப்புக் குள்ளனவர்களுக்காக கரடியனாறு வைத்தியாசலையில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சாத்திகளுக்கு அந்தந்த பரீட்சை நிலையங்களில் தனியான அறைகளில் பரீட்சை எழுதுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours