வி.ரி.சகாதேவராஜா)

இராமகிருஸ்மிசன் ஸ்தாபகர்  வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரம்  நானாட்டானில்  நடைபெற்றது.

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர்  ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ்  தலைமையில் நேற்றுமுன்தினம் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் இமட்டு.இ.கி.மிசன் துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ்  ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

பிரதம அதிதியாகஇ இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.

கடந்த வாரம் மலையகப்பயணத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்த சுவாமிகள் இந்த வாரம வவுனியா மன்னார் இநானாட்டான் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு சென்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours