(அஸ்ஹர் இப்றாஹிம்)

யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைப் பிறப்பிடமாக கொண்டவரும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சி. தில்லைநாதன் அவர்களை இலங்கையிலுள்ள  12 அரச பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தென்கிழக்கு பல்கலைக் கழகம் அதன் 14 வது பொதுப்பட்டமளிப்பு விழாவின் போது ”இலக்கிய  கலாநிதி ” பட்டத்தை முதன் முறையாக வழங்கி அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாட்டை வெளிப்படுத்தியமை போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.

இப்பேராசானை வேறு எந்தப் பல்கலைக்கழகங்களும் முந்திக் கொண்டு கௌரவிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கவில்லை என்பதுவும் கவலைப்படத்தக்க விடயமாகவும் பலர் மத்தியிலும் பார்க்கப்படுகிறது.

மிகச் சொற்ப காலம் மட்டும் தனது கல்விச் சேவையை வழங்கிய பேராசிரியரை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகமோ, அதன் நிருவாகமோ எளிதில் மறந்திடாமல் தனது 14 வது பொதுப்பட்டமளிப்பு நிகழ்வில் பேராசிரியருக்கு சிறப்பு செய்யவெனத் தீர்மானித்து அவரது இல்லத்துக்குச் சென்று அவரை அழைத்து வந்து  ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், விரிவுரையாளர்கள், நீதியரசர் போன்றோர்கள் முன்னிலையி்ல் தென்கிழக்கு பிராந்தியத்தில் வாழும் எல்லா மக்கள் சார்பிலும் அவருக்கான உயர் கௌரவத்தினை வழங்கியது என்பது வரலாற்றின் வீரமிகு பக்கங்களில் அழிக்க முடியாத வரலாறாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours