(கல்லடி நிருபர்)

சுபீட்சத்தின் நோக்கு தேசிய  வேலைத்திட்டத்திற்கு அமைய இயற்கை விவசாய கலாசாரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில்  விவசாய விரிவாக்க பிரிவினால் சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்  சேதன பசளை  உற்பத்திக்கான   ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது . 

அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி விவசாய விரிவாக்கல் பிரிவு போதனாசிரியர் வேணி திருநவன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள ஜி.பிரியவரதனின் பண்ணையில்  ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் சேதனை பசளை உற்பத்திக்கான மையம் திறந்து வைக்கப்பட்டது. 

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில்  நடைபெற்ற ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் சேதனை பசளை  உற்பத்திக்கான  மையம்  ஆரம்பிக்கும் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வைத்திய அதிகாரி எஸ்.டி.எம்.மாஹிர், மட்டக்களப்பு  4வது கெமுனு படைப்பிரிவு  இராணுவ  அதிகாரி மேஜர்  நோமல் பெரேரா, அரச முதலீட்டு வங்கியின்  பிரதி முகாமையாளர்  எஸ்.வேனுகீதன், சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவு  உத்தியோகத்தர்கள், பண்ணையாளர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை ஆரம்பித்துவைக்கப்பட்ட ஒருங்கினைந்த பண்ணை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் அதிதிகளினால் நாட்டிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours