(சுமன்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாலிபர் முன்னணியின் நிருவாகச் செயலாளரும், திருகோணமலை மாவட்டத் தலைவருமான எஸ்.தர்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
2022.02.26ம் திகதி சனிக்கிழமை மாலை 03.30 மணியளவில் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையருகில் இந்;நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதானிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குமாறு ஐநா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இலங்கை அரசாங்கம் அதனைச் செய்யாது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதாகக் கூறி அனைத்துலகையும் ஏமாற்;றி வருகின்ற நிலையில் சர்வதேசமே தலையிட்டு இச்சட்டத்iதை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களிடம் இந்தக் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு மதத் தலைவர்கள், பொது மக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரினதும் ஒத்துழைப்பு பூரணமாகக் கிடைக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours