நூருல் ஹுதா உமர்

இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளலர் (அரசியல்) ஆயிஷா அபுபக்கர் ஃபஹாத் அவர்களுக்குமான சந்திப்பொன்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், இலங்கையின் கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் போன்றவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இத்துறைகளில் இலங்கை இளைஞர்கள் முன்னேற பாகிஸ்தான் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடலின் போது இலங்கையின் விளையாட்டுத்துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு  விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளலர் (அரசியல்) ஆயிஷா அபுபக்கர் ஃபஹாத், இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு மேலும் இளைஞர்களின் ஊடாகவும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours