( அஸ்ஹர் இப்றாஹிம்)



புத்தளம் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு கல்வி கற்ற க.பொ.த..சாதாரன தர வகுப்பு மாணவர்களால் பாடசாலை நூலகத்திற்கென  ஒரு இலட்சத்து   அறுபதாயிரம் ரூபா  பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது

2000 ம் ஆண்டு  க பொ த சாதாரன தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடல்  அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது
பாடசாலை அதிபர் பரீதா முஸம்மில் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடல் நிகழ்வில் தமக்கு கற்பித்த ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்ததோடு பாடசாலை நூலகத்திற்கென கதிரைகள் , மேசை , அலுமாரி மற்றும் ஒரு தொகுதி நூல்களும் இம்மாணவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இவ்வாறான மாணவர் செயற்பாடுகள் ஏனைய மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக செயற்பாடாக அமைவதுடன் பாடசலை மாணவர்கள் தாம் கல்விகற்ற பாடசாலையோடு தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என பாடசாலை அதிபர் பரீதா முஸம்மில் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours