நூருல் ஹுதா உமர்
முன்பள்ளிப் பாலர் பாடசாலை ஆசிரியைகளான திருமதி ஏ.ஜி. பர்ஹானா, திருமதி ஏ.ஜி. சித்தி மஹ்பிறா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இறக்காமம் பிரதேச ஆயிஷா முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு (08) செவ்வாய் கிழமை ஆயிஷா முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் மௌலவி ஐ. றஷீம் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் எம்.சி.எம். ரஷ்ஷான் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதியாக இறக்காமம் அஷ்ரப் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஜெஸீம் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். ஸபூறுல் ஹஸீனா, மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் திருமதி எஸ்.எப். றிஸ்மியா ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours