எஸ்.சபேசன்,சுதாகரன்,க.விஜயரெத்தினம்
இலங்கை தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்றைய 27 ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு வாலிப முன்னணி தலைவர் சேயோன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போத மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உட்பட பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours