(காரைதீவு lசகா)

திங்களன்று(7) ஆரம்பமாகவுள்ள க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்காக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் நேற்றடன் மூடப்பட்டன. 

நேற்று(3) இறுதிநாளாகையால் பாடசாலைகளில் பலவித வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்திய மாணவர் மன்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நீண்டகாலத்திற்குப்பிறகு, அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துசிறப்பித்தார். பட்டிருப்புவலய உதவிக்கல்விப்பணிப்பாளர் பா.வரதராஜனும் சமுகமளித்திருந்தார்.

பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் ,உபஅதிபர் என்.வன்னியசிங்கம் ,உயர்தரபகுதித்தலைவர் ந.கோடீஸ்வரன் ,தமிழ்ப்பாடஆசிரியை  ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற மாணவர்மன்ற நிகழ்வு பலரையும்கவர்ந்து களைகட்டியது.
சமகாலத்திற்கேற்றவகையில் இற்றைப்படுத்தப்பட்ட மாணவரின் பலவித ஆற்றல்களையும் வெளிப்படுத்திய கலைநிகழ்ச்சிகள் மேடையேறியமை குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திரதின பவளவிழா 2023ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருப்பதையொட்டி, இன்று  04ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் இலங்கையின் 74வது சுதந்திரதினத்திலிருந்து நாடுபூராகவும் 75லட்சம் பயன்தரு மரம் நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

அதற்கமைவாக, நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) நேற்று(3) மரக்கன்று நடும் வைபவமும் இடம்பெற்றது. அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு மரக்கன்றை நட்டுவைத்தார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours