(செ.பேரின்பராசா,எஸ்.சபேசன்,இ.சுதாகரன்க.விஜயரெத்தினம்)
தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைநீலாவணை வாழ் மக்களுடனான சந்திப்பொன்று இன்று 27 ஆம் திகதி ஞாற்றுக்கிழமை மாலை துறைநீலாவணை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து தலைமையில் இடம்பெற்றது.இச்சந்திப்பானது மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் செயலாளர் க.சசிந்தரன் அவர்களது ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வுக்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அம்பாரைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் இலங்கை வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இம் மக்கள் சந்திப்பின்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா துரைநீலாவணையின் தேவைகள் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்தார் அதாவது பிரதானமாக துறைநீலாவணைக் கிராமத்திற்கு வருகைதரும் பிரதான வீதியான பெரியநீலாவணை சந்தியில் வீதிச் சுற்று வளைவு இல்லாததனால் தொடர்ந்து வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அதனால் வீதிச் சுற்றுவளைவு அமைக்கப்படவேண்டும் அதற்கான தீர்மானத்தினை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கான அனைத்து விடயங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ன உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours