( வி.ரி.சகாதேவராஜா)
ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மன ஒருமைப்பாட்டுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிகாட்டும் தெய்வீகக் கலைகளைப் பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துத்தும் நோக்குடன் யோகாசனம் பண்ணிசை பரதநாட்டியம் போன்ற 6மாதகால பயிற்சிநெறிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வானது காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் மற்றும் வளவாளர்களான திருமதி புவனேஸ்வரி ஜெயக்கணேஸ் ,திருமதி ரவீந்திரன் யோகேஸ்வரி ,திருமதி சர்மினி சுதாகரன் செல்வி ஜெ.தட்சாலினி , கு.குமாரதாசன் ,க.கோகுலராமன் மற்றும் இந்துக்கலாசார உத்தியோகத்தர்களான காரைதீவு செயலக உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, சம்மாந்துறை பிரதேசசெயலக உத்தியோகத்தர் திருமதி ஶ்ரீபிரியா கங்கைநாதன் ,மாவட்டச்செயலக உத்தியாகத்தர்கள் ந.பிரதாப் கு. ஜெயராஜி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours