( அஸ்ஹர் இப்றாஹிம்)


மாத்தறையிலிருந்து 6 பேர் கொண்ட குழுவொன்று நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற வேளை வெல்லவாய எல்லவெல நீர்வீழ்ச்சிக்கு  நீராட சென்றிருந்த வேளையிலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய பொலிஸார் அயலிலுள்ளவர்களின் உதவியுடன் 2 பேரின் சடலங்களையும் கடற்படையினரின் உதவியுடன் ஒருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மாத்தறை பம்புறன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய சந்திரசிறி ஹேவமுல்ல , 58 வயதுரடய வோல்டர் நாணயகார , 53 வயதுடைய லெஸ்லி குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் இதே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் ஒருவரும் மேலும் இருவரும் இவ்வாறு இந்த இடத்தில் நீராடச் சென்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய சுற்றாடல் பாதுகாப்பு மையம் வெல்லவாய பிரதேச சபையுடன் இணைந்து எல்லவெல நீர் வீழ்ச்சியில் நீராடச் செல்வதை தவிர்க்கும் வகையில் தடை வேலியொன்றை அமைத்திருந்த போதிலும் அதனையும் உடைத்து தள்ளிவிட்டே இவ்விடத்திற்கு வருவோர் நீராடச் செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த இருவாரத்திற்கு முன்னரும் இந்த இடத்தில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours