இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட அய்மா நிஃமத்துல்லாஹ், மஹஓயா உதவிப் பிரதேச செயலாளராக 2022.02.11 இல் மஹஓயா பிரதேச செயலாளர் திலின விக்ரமரத்ன முன்னிலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிர்வாக சேவை உத்தியோகத்தர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கடந்த 08.02.2022 இல் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஷமல் ராஜபக்ஸ அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
மருதமுனையின் முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரான அய்மா நிஃமத்துல்லாஹ், மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் அ.ற.நிஃமத்துல்லாஹ் (அறநிலா) மற்றும் ஏ.ஜீ. உம்முல் பத்தீலா ஆசிரியையின் சிரேஷ்ட புதல்வியும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அவர்களின் மனைவியுமாவார்.
Post A Comment:
0 comments so far,add yours