நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் நற்பண்புகளை கடைபிடிக்கவேண்டிய அவசியம் உள்ளது. மொட்டு அரசாங்கமாக இருந்தாலும் சரி, யானை அரசாக இருந்தாலும் சரி, தொலைபேசி அரசாக இருந்தாலும் சரி முஸ்லிங்கள் அரசாங்கங்களுடன் இணைந்து சென்றே நன்மைகளை அடையவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலான கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அஸ்பர் உதுமா லெப்பை தெரிவித்தார்.
நீண்டகாலமாக குண்டும் குழியுமாக இருந்த சம்மாந்துறை ஹஸ்ஸாலி வித்தியாலய வீதியை அபிவிருத்தி செய்து அவ்வீதியினை மக்களுக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்தத்தை முடித்து, விவசாயிகளுக்கு பசளையை இலவசமாக வழங்கி, நாட்டை மிகத்துரிதமாக அபிவிருத்தி செய்து இலங்கையில் முன்மாதிரியான ஆட்சியை கொண்டு நடத்திய மஹிந்தவின் சகல நன்மைகளையும் அனுபவித்துவிட்டு எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து பழகிய முஸ்லிம் சமூகம் இன்று பல இக்கட்டான நிலைகளை சந்தித்து வருகிறது. எமது முஸ்லிம் தலைவர்கள் எடுத்த பிழையான தீர்மானங்களினால் இன்று முஸ்லிம் சமூகம் எதிரிகளாக்கப்பட்டுள்ளது. நாம் முழுமையாக தொலைபேசிக்கு வாக்களித்து பெற்ற பயன் ஒன்றுமில்லை. சிறுபான்மை மக்கள் மத்தியில் தோற்றம் பெற்ற இனவாத சிறு கட்சிகளே முஸ்லிங்களின் இன்றைய நிலைக்கு காரணம்.
சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்ட எமது அண்டைய பல ஊர்களுக்கு வாரக்கணக்கில் சோறாக்கி போட்ட சம்மாந்துறை மக்கள் அரிசிக்கும், காசிக்கும், ஒரு கிலோ இறைச்சிக்கும் வாக்களிக்கும் நிலையை பார்க்கும் போது ஆத்திரம் வருகிறது. சம்மாந்துறை கடந்த ஆட்சியில் இரண்டு எம்.பிக்களை ஒரே தடவையில் வைத்திருந்தும் இங்கும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் என்னுடைய முயற்சியினால் பல சேவைகளை சம்மாந்துறைக்கு செய்து கொண்டு வருகின்றேன். நான் வாக்குகளுக்காக சேவை செய்யவில்லை மக்களுக்காகவே அந்த சேவை செய்கிறேன்
சம்மாந்துறை தொகுதி இழந்த பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைக்க ஒரு பொறிமுறையை உருவாக்க கோரி சம்மாந்துறை முச்சபையினருக்கு கடிதம் எழுதி அனுப்பியதுடன் அவர்கள் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கியிருந்தேன். ஆனால் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து ஊருக்கான சுயட்சை குழுவொன்ற அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கோரி உள்ளேன்.
அன்று நாட்டின் சுதந்திரத்துக்காய் முஸ்லிம் சமூகம் பெரும் பங்காற்றினர் ஆனால் இன்று முஸ்லிம் சமூகம் இனவாதிகளா சித்தரிக்கப் படுகின்ற போது வேதனையாகவுள்ளது . இன்றுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் சமுகத்தின் நிலை தொடர்பில் சிந்திக்கவில்லை அவ்வாறு சிந்தித்து இருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் நடுநிலையாக இருந்திருக்க வேண்டும். 30 வருட யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்து இந்த கொங்கீரிட் , கார்பட் பாதைகளை அறிமுகம் செய்து வைத்து நாட்டை வளம் மிக்க தாய் மாற்றியர் அன்று இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. அவருக்கு நாங்கள் எப்போதுமே வாக்களிக்க வில்லை. ஆனால் அவர் நமக்கான சேவைகளை எவ்வித பாகுபாடுமின்றி வழங்கி வருகிறார் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours