பைஷல் இஸ்மாயில் -
ஜனாதிபதியின் சுபீட்சத்துக்கு நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு மாகாணத்திலுள்ள சுய தொழில் கை வினைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களம் பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதன் முதற்கட்டமாக, திருகோணமலை மாவட்ட உப்புவெளி சந்தியில் முதலாவது மரத்தளபாட விற்பனை நிலையம் நேற்று மாலை (17) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்துகொண்டு குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித பீ. வணிகசிங்க, முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண ஆணையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours