(காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நிந்தவூர் சிவமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஆன்மிக நூல்கள் வழங்கப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சிவனருள் பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து நடாத்திய இவ்விஷேட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(11) இடம்பெற்றது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட ஆன்மிக நூல்கள் அங்கு அறநெறி மாணவருக்கும் அக்கரைப்பற்று அம்மன் மகளிர் இல்லத்திற்கும் வழங்கப்பட்டன.
மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா நெறிப்படுத்த ஆலயதலைவர் கி. ஜெயசிறில் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவன செயலாளரும் அக்கரைப்பற்று அம்மன் மகளிர் இல்லப் பணிப்பாளருமான கே. வாமதேவன் ஆலையடிவேம்பு பிரதேசசபைத்தவிசாளர் எஸ்.கிறோஜாதரன் மற்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
அங்கு அறநெறி மாணவர்களின் பேச்சு பஜனை கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அறநெறி மாணவி எஸ்.ஷாஹரியின் ஆலயவழிபாடு பற்றிய உரை பலரையும் கவர்ந்தது.
ஆலயத்திற்கு உதவிய காரைதீவைச்சேர்ந்த மாவடி கந்தசுவாமிஆலய தர்;மகர்த்தா க.ஆறுமுகம் லண்டன் கோகுலரமணன் துரைரத்னம் உள்ளிட்ட சிலபிரமுகர்களும் சமுகமளித்திருந்தனர்.
இறுதியில் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்று மாணவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பெருந்தொகையான பக்தர்களும் கலந்துகொண்டனர். ஆலயசெயலாளர் த.சண்முகநாதன் நன்றியுரையாற்றினார்
Post A Comment:
0 comments so far,add yours