எந்த ஆசிரியர்களிடமும் கட்டாயப்படுத்தி கணக்காய்வுத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பாடக்குறிப்பு மற்றும் பாடத்திட்டங்களை கேட்பதற்கு  உரிமை கிடையாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்

மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இலங்கை ஆசிரிய சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் உதயரூபன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது அம்பாரை மாவட்டத்தில் உள்ள சில கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடம் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்புக்களை ஒப்படைக்கும் படியும் பாடக்குறிப்பு இல்லாத ஆசிரியர்களிடம் ஒருவருடத்திற்கான பாடக்குறிப்பினை எழுதி ஒப்படைக்குமாறும் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் கருத்துத் தெரிவிக்கையில்

 கணக்காய்வு உத்தியோகத்தர்கள் எந்த ஆசிரியர்களிடமும் பாடத்திட்டம் ,பாடக்குறிப்புகளைக் கோரமுடியாது அவர்களது கடமை நிதி தொடர்பான விடயங்களை கணக்காய்வுசெய்வதே தவிர ஆசிரியர்களிடம் பாடத்திட்டம் பாடக்குறிப்புகளைக் கோருவதற்கு எவ்வித அதிகாரமும் அவர்களுக்கு இல்லை என்பதுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக கணக்காய்வு சங்கததின்தலைவர் மற்றும் உரிய திணைக்களத் தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours