(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சில பின்தங்கிய கிராமங்களுக்கு பொதுக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
வளத்தாப்பிட்டி, கல்லரிச்சல், கைகாட்டி மற்றும் செந்நெல் கிராமங்களில் மிக நீண்ட காலமாகக் காணப்பட்ட குடிநீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்து தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக குறுகிய காலத்தில் இப்பொதுக் கிணறுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கையளிக்கும் நிகழ்வில் பவுண்டேசன் தலைவர் ரஹ்மத் மன்சூர் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இவ்வுயரிய சேவையை செய்வதற்கு பூரண அணுசரணை வழங்கிய YWMA பேரவைக்கு தனது விஷேட நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours