(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் பழனி ஆண்டவர் தேவஸ்தான பரிபாலன சபையினால் வசதி குறைந்த மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு ஆலய பரிபாலனைசபைத் தலைவர் தேசபந்து தேசகீர்த்தி நாகலிங்கம் சசிகரன் தலைமையில் இன்று (14) ஆலயத்தில் இடம்பெற்றது.
போதனா வைத்தியசாலையில் சுகாதாரத் தொழில் புரியும் ஊழியர்களில், வசதி குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கல்வி கற்கும் 50 மாணவர்களுக்காக இவ்வப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்ஜினி கணேசலிங்கம் பிரதம அதியாகக் கலந்து கொண்டு அப்பியாசக் கொப்பிகளை மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கி வைத்தார்.
இவ்வப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்களான டாக்டர். மைதிலி, டாக்டர், எப்.பீ. மதன், சிரேஸ்ட சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர். பீ. ஜீபரா, வெளிநோயர் பிரிவிற்கான சிரேஸ்ட வைத்திய உத்தியோகத்தர் திருமதி. துரைராஜசிங்கம், ஆலய பரிபாலனை சபை ஆலோசகர் வீ. புஸ்பராஜா, செயலாளர் கே. ரஜனிகாந் உட்பட வைத்திய நிபுணர்கள், கணக்காளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours