(காரைதீவு சகா)
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அதிரடியாக மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே மாற்றத்தைச் செய்துள்ளார்.
அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது ஆளுநரின் செயலாளர் டபிள்யு.மதன்நாயக்காவும் உடனிருந்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக திருமதி கலாமதி பத்மராஜா, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்னம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை , கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக் காவும்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும் ,கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீமும், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மாகாண பிரதம செயலாளர் பதவி தொடர்ந்து வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours