( றம்ஸீன் முஹம்மட்)
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்கத்தின் வருடாந்த குடும்ப ஒன்று கூடலும் கடந்த 3 வருடங்களில் இடமாற்றம் பெற்ற, ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் கடந்த ஞாயிறு காலை முதல் மாலை வரை வைத்தியசால வளாகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதீதியாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.அப்துல் வாஜித் கௌரவ அதிதியாகவும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours