நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் தைப்பொங்கல் நிகழ்வு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களின் வழிகாட்டலில் கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.அனூசியா தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (31) பல்கலைக்கழகத்தில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். யோகராஜா, இந்நிகழ்வு சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமானதொன்று என்றும் இவ்வாறான நிகழ்வில் பங்குகொள்வது மிகுந்த மனநிறைவினைத் தருகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில், கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் பிரதான உரையினை நிகழ்த்தியதுடன் பீடத்தின் மூத்த விரிவுரையாளர்களும் உரையாற்றினர். இதன்போது கலந்து கொண்டிருந்தவர்களுக்கு பொங்கல் உணவுகள் பரிமாறப்பட்டு நிகழ்வுகள் முடிவுற்றது.

இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours