நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழக 20வது வருடாந்த பொதுக்கூட்டமும் சர்வதேச அளவில் சாதனை படைத்த கழக வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் சாய்ந்தமருது பிமா விளையாட்டு கழக 10வது ஆண்டு நிறைவு நிகழ்வும் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தலைவர் ஆசிரியர் ஏ. ஆதம்பாவா தலைமையில் கல்முனை தனியார் விடுதியில் இன்று (26) இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் சர்வதேச நடுவராக தெரிவாகி பணியாற்றிவரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம். ஜப்ரான்,  சர்வதேச உதைப்பந்தாட்ட நடுவராக பணியாற்றிவரும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினரும், இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளன உதவிப் பொதுச்செயலாளருமான ஆசிரியர் அலியார் பைசர், தேசிய Tchoukball அணி வீரரும், Tchoukball சர்வதேச போட்டியின் வெண்கல பதக்க வெற்றியாளருமான ஆசிரியர் எம்.வை.எம். றக்கிப் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக போஷகரும், அதியுயர் நிர்வாக குழுவின் உறுப்பினருமான மாளிகைக்காடு- சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக், சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகம் மற்றும் பிமா விளையாட்டு கழகத்தின் உயர்பீடத்தினர் மற்றும் நிர்வாகிகள், பிரதேசத்தின் முன்னணி கழகங்களின் முக்கிய நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழக உதைபந்தாட்ட அணியின் சீருடையும், சாய்ந்தமருது பிமா விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் கழக சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours