(காரைதீவு  சகா)


சம்மாந்துறை வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட 'பலோ மீ' "Follow me"நூல் வெளியீட்டுவிழா  வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நேற்று பணிமனையின் அய்ன்ஸ்ரைன் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர்அலி தலைமையிலான குழுவினர் தயாரித்த இந்நூலின் முதற்பிரதியினை அவர் பணிப்பாளர் நஜீமிடம் வழங்கிவைத்தார்.

பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான  பி.எம்.யசீர் அறபாத், ஏ.எல்.அப்துல்மஜீட் , உதவிக்கல்விப்பணிப்பாளர்களான  ஏ.நசீர், யு.எல்.றியால் ,வி.ரி.சகாதேவராஜா,ஏ. முஸ்ரக்அலி .ஏ.நசீர்.எ.எல்.எம் றஷீன் கோட்டக்கல்விப்பணிப்பாளர்களான எம்.எ.சபூர்தம்பி, யு.எல்.மஹூமூட்லெவ்வை உள்ளிட்ட சேவைக்கால ஆசிரியஆலோசகர்கள் அனைவருக்கும் இதன்பிரதிகள் வழங்கப்பட்டன.

வழமைக்குமேலதிகமாக பொதுப்பரீட்சைகளின் வலயமட்டபெறுபேற்று பகுப்பாய்வும் இம்முறை வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.
நூல்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பணிப்பாளர் நஜீம் நன்றிகூறி வாழ்த்தினார்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours