ஈழத்து கவிதாயினிகளான
ஷிபானா அஸீமின் - காதலென்பது வேறொன்றுமில்லை, ரிஸ்ஹா முக்தாரின் - ஆதியில் ஒரு காதல் இருந்தது எனும் கவிதை நூல்கள் இரண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில்
எமரால்டு பதிப்பகத்தின் ஊடாக கவிஞர் அப்துல் ஹமீட் ஷேக் முஹம்மத் (மனுஷ்ய புத்திரன்) அவர்களால் 2022/03/23ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
நக்கீரன் பத்திரிகையின் துணை ஆசிரியர் டி.எஸ். கௌதமன் அவர்களின் அணிந்துரையுடன் வெளியான இக்கவிதை தொகுதிகளின் முதற்பிரதிகளை உமா மகேஸ்வரி, குமரன், அர்ஷா, வினோதினி போன்றோர் பெற்றுக்கொண்டார்கள்.
இக்கவிதைத் தொகுதிகளில் "காதலென்பது வேறொன்றுமில்லை" என்ற கவிதைத் தொகுதியை கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட
நூலாசிரியர் கவிதாயினி ஷிபானா அஸீம் அவர்கள் தந்த கன்னிக்
கவிதை நூலாகும்.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவியான இவர் தற்போது
நூலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
தஞ்ஞாவூர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மாணவியுமான இவர் முகநூலில் மயிலிறகு மனசு எனும் புனை பெயரில் கவிதைகளை எழுதி வரும் இவரது முக நூல் அடையாளம்
மயிலிறகு மனசு ஷிஃபானா என்பதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours