கிழக்கு மாகாணத்தில் சமூக பணியாற்றிவரும் சுவிஸ் உதயம் அமைப்பினால் இன்று 2022.02.15 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.


மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு உதவி திட்டங்களை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின்  தலைவர் டி.எல்.சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி –பதுளை வீதியில் உள்ள கரடியன்குளம் பாடசாலையில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கரடியன்குளம் பாடசாலையின் ஆசிரியர்கள் சுவிஸ் உதயத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் பாடசாலையில் கற்பித்தல் கற்றல் செயற்பாடுகளுக்கான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் அக்கரைப்பாக்கியன் மற்றும் உறுப்பினர் க.யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று புல்லுமலையில் சருமநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளுக்கான சத்துணவு மற்றும் மருந்துபொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இரண்டாவது தடவையாக குறித்த பிள்ளைகளின் நன்மை கருதி குறித்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த இரண்டு பிள்ளைகளின் குடும்பம் மிகவும் வறிய குடும்பம் என்ற ரீதியில் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பு வழங்கிவருகின்றது.
சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகத்தின் வழிகாட்டலின் கீழ் இதற்கான நிதியினை சுவிஸ் உதயம் அமைப்பு வழங்கியிருந்தது.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours