எஸ்.சபேசன்


இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால்  எங்களது உயிர்ச்சேதம் மடடுமல்ல தமிழ் பேசும் மக்களது இருப்புக்களும் கேள்விக்குறியாகக் கூடிய சட்டமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது. என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் வாலிபமுன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம்,  மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் மற்றும் இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

அவர் மேலும் பேசுகையில் இன்று சர்வதேசத்தில் இருக்கின்ற சட்டத்திற்கு முரணானதும் மோசமானதுமான சட்டமாகவே இப் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்து கொண்டு இருக்கின்றது.ஆரம்பத்தில் தமிழ் மக்கள் இச்சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர் ஆனால் இன்று இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கின்றது. இச்சட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவே தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி இக் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து இருக்கின்றனர் இது வடகிழக்கு மாத்திரமல்ல இதற்கு ஆதரவாக இலங்கையில் வாழும் அனேகர் எம்மோடு இணைந்து கைகோர்த்துள்ளனர்.

இந்த சட்டத்தினை நீக்கவேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்நாடு  பெரும் அழிவை நோக்கிச்செல்லக்கூடும் அதனால் இந்நாட்டில் வாழும் அனைவரும் இச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற இப் போராட்டமானது சர்வதேசம் வரை எம்மால் எடுத்துச்செல்லப்படும் அதே வேளை இந்நாட்டில் ஜனநாயகம் நிலைக்கவேண்டும் என்பதற்காகவே இச்செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours