(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற திருத்தலமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் மாசி மாத திருவிழா இன்று (20) திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் மாசி மாத திருவிழா கடந்த (16) திகதி பங்குத்தந்தை அருட்பணி இருதயநாதன் ஜெமில்டன் அடிகளார் தலைமையில் கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நவநாட் திருவிழா வழிபாடுகள் இடம்பெற்றது.
கடந்த (19) திகதி சனிக்கிழமை காலை மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி அலெக்ஸ் றொபட் அடிகளார் தலைமையில் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருச்சடங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், அன்றைய தினம் மாலை நற்கருணை எழுந்தேற்றம் அருட்பணி ரமேஸ் கிறிஸ்டி அடிகளாரினால் வழிநடாத்தப்பட்டிருந்தது.
அன்னையின் திருவிழா கூட்டுத் திருப்பலி அருட்பணி லெபோன் சுதன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அன்னையின் திருச் சொரூபத்தினை தாங்கியவண்ணம் ஆலயத்தின் உள்வீதி வலம்வந்ததையடுத்து அன்னையின் ஆசீரைத் தொடர்ந்து, பங்குத்தந்தை இருதயநாதன் ஜெமில்டன் மற்றும் பங்கு மக்களால் கொடியிறக்கம் நிகழ்வு இடம்பெற்றதையடுத்து இவ்வருட மாசிமாத திருவிா நிறைவுபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours