(க.விஜயரெத்தினம்)


ஊடக அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை  இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(05) காலை 10 மணி அளவில் காந்தி பூங்கா முன்பாக நடைபெறவுள்ள குறித்த போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புக்கள்,அரசியல் வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு ஊடகவியலாளர் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் கவயீர்ப்பு  போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு  அண்மைக்காலமாக இலங்கையில் நடக்கும் ஊடக அடக்குமுறைக்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமையை கண்டித்தும்,கண்டனங்களை தெரிவிக்கும்முகமாக குறித்த நிகழ்வுக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours