( அஸ்ஹர் இப்றாஹிம் )
சர்வதேச ரீதியில் பங்கேற்று அம்பாறை மாவட்டத்திற்கும் , கல்முனை பிரதேசத்திற்கும் , சாய்ந்தமருதிற்கும் புகழ் சேர்த்த மூன்று வீர்ர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கழக காற்பந்தாட்ட சீருடை அறிமுக நிகழ்வும் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆதம்பாவா தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் ( FIFA ) சர்வதேச காற்பந்தாட்ட நடுவராக கடமையாற்றிவரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் , சர்வதேச காற்பந்தாட்ட நடுவரும் , தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினரும் , இலங்கை பெட்மின்டன் சம்மேளன உதவிப் பொதுச் செயலாளருமான உடற்கல்வித்துறை ஆசிரியருமான அலியார் பைஸர் , தேசிய சொக்போல் ( Tchoukball ) அணி வீர்ரும் , சர்வதேச சொக்போல் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீர்ரும் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியருமான எம்.வை.எம்.றக்கீப் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் போசகரும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவரும் , முபாறக்ஸ் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் பிரதம அதிதியாகவும் , கழக உயர்பீட உறுப்பினர்கள் , கழக வீர்ர்கள் , சாய்ந்தமருது பீமா விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours