(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு ஸ்ரீ ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கான நுழைவாயில் முகப்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17) திகதி சுபவேளையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் பிரதம குரு சபரீஷ சைதன்யர் தலைமையில் சிவஸ்ரீ கோ.கு. கிரிதரக் குருக்களின் விசேட கிரிகை பூஜைகளுடன் முகப்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கல்லடி - கல்முனை பிரதான வீதிக்கு முன்பாக ஸ்ரீ ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள முகப்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், ஆலய செயலாளர் எ.ரவீந்திரன் உட்பட ஆலய குருக்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கோபுரத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours