பைஷல் இஸ்மாயில் 



கொவிட் 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினர் பாரிய பங்களிப்புக்களை இரவு பகல் பாராது வழங்கி செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஏனைய மாகாணங்களைவிட எமது மாகாணம் சிறந்து விளங்கியதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.

 

மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் .ஆர்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் இன்று (23) திருகோணமலை மாகாணப் பணிமையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பு மருந்துளை பொதுமக்களு க்கு வழங்கும் செயற்பாட்டிலும் எமது மாகாணமே சிறந்து விளங்குவதாகுவும், ஏனை நாடுகளைவிட எமது நாட்டலுள்ள மக்கள் இத்தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மீண்டும் கொவிட் தொற்றுப் பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி வருவதை நாம் அறிவோம். இதை முற்று முழுதாக ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், அதற்கான வழிவகைகளையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ஆட்கொள்ளி நோயான கொரோனா நோயை எமது மாகாணத்தில் மாத்திரமல்லாமல் எமது நாட்டிலிருந்து விரட்டியடிக்க ஒருமித்து செயற்படுவோம் என்றார்.

 

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சகாதார சேவைகள் பணிமனையில் நிலவுகின்ற குறைபாடுகள் குறித்தும் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் கேட்டறிந்துகொண்டார். இதில் வைத்தியர்கள்கணக்காளர்நிருவாக உத்தியோகத்தர், சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours