நூருல் ஹுதா உமர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம், பணிச் சுரண்டல், குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றினால் பாதிக்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே இதுதொடர்பான விஷேட விழிப்புணர்வு ஒன்றுகூடல் SWOD அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையிலும் அதன் செயற்திட்ட இணைப்பாளர் கே. லதனின் வழிகாட்டலிலும் இறக்காமம் புலம்பெயர் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி எஸ்.டி. நஜீமியா தலைமையில் (10) இடம்பெற்றது.
இச்செயலமர்வில் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ், எஸ்.எல். ஸபூறுல் ஹஸீனா மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எஸ்.எப்.றிஸ்மியா ஜஹான் மற்றும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு உத்தியோகத்தர்களான கே.எம்.ஏ. அஸீஸ் மற்றும் பீ. புஷ்பராஜா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் பிரிவுகள் ஊடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பாகவும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் அவற்றினூடாக அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வும் தெளிவுகளும் படுத்தப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours